Saturday, October 24, 2009

Pensions - Two stories

This morning I have come across incidentally two interesting stories surprisingly related to Senior Citizen's pension funds as given below and was wondering what would be the mentality of the recipients of those senior citizen's pensions.

Story-1:

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், 1952ம் ஆண்டு வரை கேரளம், தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகம் இணைந்த பகுதிகளைக் கொண்ட சென்னை மாகாணத்தின் முதலமைச்சர், சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல், காந்தியடிகள் உள்பட தேசத் தலைவர்கள் பலருக்கு மிக நெருக்கமானவர்...இத்தனை பெருமைகளைக் கொண்டாலும், மிக எளிமையானவராக வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்தவர், இராஜாஜி.

இராஜாஜியின் பொது வாழ்வில் நடந்த ஒவ்வொரு முக்கிய நிகழ்வும் சுவாரஸியம் நிரம்பியதாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அவரது தனிப்பட்ட எளிய வாழ்விலும் பல சுவாரஸியமான சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றுள் ஒன்று தான் நாம் இங்கெ பார்க்கப் போவது...

இராஜாஜியின் பேரன் பார்த்தசாரதி, சிவில் இன்ஜினியர் பட்டம் பெற்று, வட மாநிலமொன்றில் பெரிய பதவியில் பணிபுரிந்து வந்தார். திடீரென ஒரு நாள் வேலையைத் துறந்து சென்னை திரும்பிவிட்டார். இதைப் பார்த்து கவலைப்பட்ட இராஜாஜி "என்ன இப்படிச் செய்துட்ட..." என்றார்.

"நான் சொந்தமா ஒரு நிறுவனம் தொடங்கப்போறேன்" என்றார் பேரன். இராஜாஜிக்கு மேலும் கவலையாகிவிட்டது. ஆனால் பேரனாயிற்றே...அதனால் "நான் ஏதாவது உதவட்டுமா?" என்று கேட்டார்! "எனக்கு உதவுணும்னு நினைச்சா நீங்க ஒரு சின்ன காரியம் பண்ணலாம்" என்றார் பேரன்.

" என்ன?'' என்று கேட்டார் இராஜாஜி. "ஃபோன் இல்லாமல் நிறுவனத்தை நடத்துறது ரொம்பக் கஷ்டம். கனெக்ஷன் கிடைப்பதோ குதிரைக்கொம்பா இருக்கிறது. ஒரு வார்த்தை நீங்க சொன்னா உடனே கிடைச்சுடும்" என்றார் பார்த்தசாரதி. சிபாரிசுகள், விதிமுறைகளை மீறுதல் ஆகிய செயல்களை அறவே வெறுப்பவர் இராஜாஜி. பேரனுக்காக தனது கொள்கைகளை தளர்த்திக் கொள்ள அவர் விரும்பவில்லை. "அதோ டெலிஃபோன் டைக்டரி இருக்குபாரு; அதை எடு" என்றார் இராஜாஜி. அதைப் புரட்டி ஒரு பக்கத்தைச் சுட்டிக்காட்டினார்.

''எளிதாக தொலைபேசியை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்"என்றிருந்த விளம்பரத்தை பேரனிடம் காட்டி, "இந்த திட்டத்துல விண்ணப்பிச்சா, உடனே கனெக்ஷன் கிடைச்சிடும். சிபாரிசு தேவையில்லை" என்றார். "அதை நான்
படிச்சுட்டேன். ஃபோன் இணைப்பு உடனே கிடைச்சுடும்; ஆனா அதுக்கு இரண்டாயிரம் ரூபாய் பணம் கட்டணுமே...இப்போதைக்கு என்னிடம் பணம் இல்லையே" என்றார்.

உடனே இராஜாஜி தமது செக் புத்தகத்தை எடுத்து, பார்த்தசாரதிக்கு இரண்டாயிரம் ரூபாய் செக் எழுதிக் கொடுத்தார். "முன்னாள் கவர்னர் ஜெனரலுக்கு பென்ஷன் மாதம் ஆயிரம் ரூபாய்...ஏற்கனவே போன மாச பென்ஷன் பணமும் சேர்த்து, ரெண்டாயிரம் ரூபாய் உனக்கு தர்றேன்" என்று பேரனிடம் செக்கை நீட்டினார்.

தாத்தா தனது பென்ஷன் தொகையை அப்படியே கொடுத்ததில் நெகிழ்ந்து போன பார்த்த சாரதி "ஆறுமாசத்தில் திருப்பித் தர்றேன்" என்று சொல்ல, பேரனை ஆசீர்வதித்து அனுப்பினார் இராஜாஜி. பார்த்தசாரதி தொடங்கிய நிறுவனம் நன்றாகவ நடந்ததால், சரியாக ஆறாவது மாதம் இரண்டாயிரம் ரூபாய்க்கு செக் எழுதி ராஜாஜியிடம் கொடுத்தார் பார்த்தசாரதி.

தன்னைப் போல தன் பேரனும் நேர நிர்வாகத்தைக் கடைபிடித்து, சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதால் மகிழ்ச்சியடைந்த இராஜாஜி, "எனக்கு இந்த சந்தோஷம் போதும். பணத்தை என்னுடைய அன்பளிப்பாக வைத்துக் கொள்" என அவரிடமே கொடுத்து ஆசிர்வதித்தார்.

Story-2:

Not to forget of course, the donors (voluntarily and involuntarily) are on the losing side anyways. I remember someone said "giving is pleasure". I am sure they have NOT referred to the story-2 here!!

0 comments:

Post a Comment

Please let me know your inputs/feedback on this blog post: